Life Quotes in Tamil – Motivational Quotes in Tamil – Image
Life Quotes in Tamil


பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி…
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்

பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…
பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.

Best Life Quotes in Tamil

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!
அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்…
எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.
வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை…!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை…!
Life Success Quotes in Tamil
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.
இந்த வீடியோவை பாருங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும், வெற்றி உறுதியாகும்.
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…
Recent Comments