Life Quotes in Tamil For Dp – Inspirational Quotes For Youngsters Tamil
Life Quotes in Tamil For Dp
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி…
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது
ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை

அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்…
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…
அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்…

அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை…
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…

மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…
அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது
தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…
யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை…
இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்…
வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்

எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்…
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…
நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை…
இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க
சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது
புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்…
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு…
அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி…
விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்…
ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்…
மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்…
வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…
தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க…
நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க…
கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தருது…
Recent Comments